இந்த வருடம் திருமணம் செய்யும் இளம் ஜோடிகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட
ஹோம் ஸ்விட் ஹோம் கடன் திட்டத்தின் கீழ் கடனை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா உரையாற்றிக்கொண்டிருந்த போது அவரிடம் கேள்வி எழுப்பி, நாமல் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
இந்த கடன் திட்டத்திற்கான மாத தவணை கட்டணம் எவ்வளவு என நாமல் வினவினார். அப்போது ராஜாங்க அமைச்சருக்கும் அவருக்கும் இடையில் இந்த உரையாடல் ஏற்பட்டது.
நாமல் ராஜபக்ச - ஹோம் ஸ்விட் ஹோம் கடனை நானும் இந்த வருடம் பெற எதிர்பார்த்துள்ளேன். அதற்கான மாத தவணை கட்டணம் எவ்வளவு என்று அறிந்துக்கொள்ள முடியுமா?.
ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா - 6 வீதம் வட்டி, 25 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும். நாமல் ராஜபக்ச - நான் தவணை கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன்.
நிரோஷன் பெரேரா - தவணை கட்டணம் எவ்வளவு என்று என்னால் கூற முடியாது. நீங்கள பெறப் போகும் தொகைக்கு அமைய கணக்கிட்டு பாருங்கள். உங்களுக்கு பிணை கொடுக்க அப்பா இருக்கிறார் தானே பயப்பட வேண்டாம்.
நாமல் ராஜபக்ச - இளைஞர்களுக்கு வீடு கட்ட கடன் கொடுப்பது நல்லது. அந்த கடனை பெற குறைந்தது ஒரு லட்சம் ரூபாயாவது சம்பளம் பெற வேண்டும். மாதம் 64 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். வட்டி 6 வீதம் எனக் கூறுகின்றீர்கள். அப்படியானால், மீதமுள்ள வட்டியை எப்படி கட்டுவது. மக்களின் பணத்தில்தான் அதனை செலுத்த வேண்டி வரும் எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.