-ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
கட்சியின் மத்திய குழுவினர் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் வர்த்தக வாணிப கைத்தொழில் கூட்டுறவு மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் அமைச்சரும் கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியூதீனை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது இன்று வியாழக்கிழமை இரவு பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. மூதூர் பிரதேச மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தார்கள்.
திருகோணமலை மாவட்டத்துக்கு விரைவில் விஜயம் செய்யவுள்ளதாகவும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா,கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன், வட்டார வேட்பாளர் சியாம் உட்பட மூதூர் மத்திய குழு உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றார்கள்.
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.