Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

வரவுசெலவுத்திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள வாகனங்களின், விபரங்கள் இதோ

வரவுசெலவுத்திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக வாகனங்களின் விலைகள் குறைந்தது 150,000 ரூபாவால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பினால் வாகனங்கள் 150,000 ரூபா முதல் 600,000 ரூபாவரை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி 800CC சுசுக்கி அல்டோ, டெய்சு மிரா, டொயோட்டா பிக்ஸிஸ், ஹொன்டா என் பொக்ஸ் போன்றவை 150,000 வரை அதிகரித்துள்ளது.


1000CC டொயோட்டா வியோஸ், டொயோட்டா பாஸோ போன்றவை 250,000 வரை அதிகரித்துள்ளன. 1300CC வாகனங்கள் 500,000 வரை அதிகரித்துள்ளன.


1500CC ரக டொயோட்டா பீரிமியோ போன்ற வாகனங்கள் 600,000 ரூபா வரை அதிகரித்துள்ளன. ஹைப்பிரைட் 800CC வெகனார் வாகனங்கள் 250,000 ரூபா வரை அதிகரித்துள்ளன.


ஹைபிரைட் 1500CC வாகனங்கள் 500,000 ரூபாவரை அதிகரித்துள்ளன. எனினும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் 175,000 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.