தெஹிவளை இத்திஹாத் அணியின் ஒரு தசாப்த பூர்த்தியை முன்னிட்டு கடந்த 02-03-2018 அன்று தெஹிவளை ஜயஸிங்க மைதானத்தில் உலமாக்களுக்கான மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி வெகுவிமர்சையாக நடாத்தப்பட்டது.
நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் திறமையான அணிகள் உள்வாங்கப்பட்டு "ரிஷாத்பதியுத்தீன்" வெற்றிக்கிண்ணம் ஜயஸிங்க மைதானத்தில் மிகவும் கோலாகலமாக போட்டிகள் ஆரம்பமானது. ஆரம்பம் முதலே விருவிருப்பாக நடைபெற்ற போட்டிகளில் சிக்சர்களும், பவுண்ரிகளும் என்று பந்துகள் எல்லைக்கோட்டைத் தாண்டி பார்வையாளர்களை மகிழ்வித்தவன்னம் உலமாக்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அணிக்கு பதினொரு உலமா வீரர்கள் என்று வரையறுத்து நடத்தப்பட்ட போட்டியில் பல அரைச்சதங்கள் உலமா வீரர்களால் பெறப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இறுதியில் வெற்றிக்கிண்ணம் யாருக்கு என்ற கேள்விக்கு பதில் தேடும் விதமாக ஏற்பாட்டு அணியான உலமாகிரிகெட்டில் ஒரு தசாப்தம் கால் பதித்து பல வெற்றிக்கின்னங்களை சுவீகரித்த தெஹிவளை இத்திஹாத் அணியும் கொழும்பு நைட்றைடஸ் அனியும் பலப்பரீட்சை நடத்தியது.
16 பந்துகளில் 33 ஓட்டங்கள் இத்திஹாத் அணியினால் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்ட போதிய வெளிச்சமின்மையால் இறுதி ஓவரில் நான்கு பந்துகளுக்கு 16 ஓட்டம் தேவை என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நைட்றைடஸ் அணியினர் போட்டியை நிருத்திக்கொண்டனர்.
பரிசுத்தொகை சரிசமனாக இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் இத்திஹாத் அணியினர் சம்பியன் ஆக முடிசூடியது. இரண்டாம் இடத்தை கொழும்பு நைட்றைடஸ் அணியும், மூன்றாம் இடத்தை பானந்துரை யாஹூ அணியினரும் நான்காம் இடத்தை அக்குரனை ரஹ்மானியா அணியினரும் தட்டிச்சென்றனர்.
அத்துடன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுக்கு இத்திஹாத் அனியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் மெளலவி தில்ஷான் அவருடைய திறமையான ஆட்டம் மற்றும் பந்துவீச்சின் மூலம் மகுடம் சூட்டிக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக "இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு" அமைப்பின் தலைவர் ரியாஸ் அவர்களும், மேமன் சங்க உறுப்பினர் அனீஸ் பாbய் மற்றும் தெஹிவளை பள்ளிவாசல் தவிசாளர் அவர்களும் மற்றும் தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர் மரீனா அவர்களும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
எதிர்காலத்திலும் இன்ஷா அல்லாஹ்! இத்திஹாத் அணியினால் நாடளாவிய ரீதியில் உலமாக்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்படும் என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம்.
செய்தித் தொகுப்பாளர் :
J.M. றஷாத் (மனாரி)
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.