எனது ஆளுநர் காலத்தில் தமது சொந்த இடங்களிலேயே அரச அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட 12 தொழிநுட்ப உதவியாளர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட தொழிநுட்ப உதவியாளர் நியமனங்களை நிரப்பும் வகையில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற 12 பேருக்கான நியமனங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை.சலீம் உள்ளிட்ட கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.