அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்ப்பட்ட அமைதியின்மையின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானதன் பின்னர் சிறைக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கைதிகள் அதற்கு எதிர்ப்பை தெரிவித்து கூரை மீது ஏறி போராட்டம் நடத்தியதுடன் சிறையை அவர்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர்.
இதன்போதே, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில், இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
(Vavuniya Sajath)
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.