33 வருட காலமாக இழந்தும், இழக்கப்பட்டும் வந்த புத்தளம் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற
பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்வதற்காக வேண்டி அரசியல் வேற்றுமைகளை மறந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து பொதுச் சின்னத்தில் (தராசு) போட்டியிட எடுத்துள்ள தீர்மானத்தினை ஐக்கிய மக்கள் காங்கிரஸ் (UPC) வரவேற்கிறது.
இவ்வாறானதொரு தீர்மானத்தினை கம்பஹா மாவட்டத்திலும் எடுத்து ஆண்டு ஆண்டு காலமாக இழந்தும் இழக்கப்பட்டும் வருகின்ற எமது கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொள்வதற்கான வியூகம் ஒன்றினை அமைத்து தருமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களிடமும் சுமார் 65,000 க்கும் மேற்பட்ட கம்பஹா மாவட்ட முஸ்லிம் மறறும் மலே முஸ்லிம் வாக்காளர்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் காங்கிரஸின் ( UPC) பொதுச் செயலாளரும் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் (J.P) தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.