Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

அனுராதபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 76 ​பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் அநுராதபுரம் பொது வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் மூவரும் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தேசிய வைத்தியசாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை நாடு பூராகவும் உள்ள 18 வைத்தியசாலைகளில் 245 பேர் கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.